உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்

என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின் வலியை வேதனையை  கவலையை நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாயே அதை உனக்கு புரியவைக்க என்னையே சிலுவை மரத்துக்கு  ஒப்புக்கொடுத்து கொடிய வேதனை அனுபவித்து எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன் .நான் எனது மனதில் உன்னை இழந்ததால் எனது மனதும் இப்படியே ஒவ்வொரு கணபொழுதிலும் கிழிக்கபட்டு கொண்டிருக்கிறது .இந்த வலி வேதனையை எத்தனையோ தீர்க்கதரிசிகள் வாயிலாக பலமுறை கூறினேன் .நீயோ  அவர்களை  தூசித்தாய்  கேலி செய்தாய் ,அவமதித்தாய் ,துன்புறுத்தினாய் ஏன் கொலையும் செய்தாய் .இறுதியாக உனக்கு புரிய வைக்க நானே இறங்கி  வந்தேன் உவமைகள் வழியாக பேசினேன் .நீ உன் மூதாதையர் போல என்னையும் கேலி செய்தாய் .அவமரியாதை செய்து துன்புறுத்தினாய் .இறுதியாக சிலுவையில் என்னை கொலை செய்தாய் .நீ எனக்கு  செய்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு  அதை நன்மையாக மாறினேன் .உன் மீது  எனக்கு எந்த கோபமும்  இல்லை அனைத்து மனிதர்களும் காண மிகவும் கேவலமாக அசிங்கமாக பயங்கர மரணத்தை இஸ்ரவேல் தேசத்தில் நான் அன்று இறந்தது எதற்காக  நீ என் தண்டனைக்கு தப்பி நீ என்னுடன் எனது இரட்சியத்தில்  நித்திய  நித்தியமாக என் கூடவே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணமே  அன்றி வேறு எந்த காரணமும் இல்லை .நீ செய்ய வேண்டியது எல்லாம்  உலகின் எந்த மூலையில் இருந்தாலும்  யேசுவே  நான் உம்மை மனபூர்வமாக சொந்த
இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் .நீர் எனக்காக 2000 ஆண்டுகளிற்கு முன் மரித்ததை  ஏற்றுக்கொள்கிறேன் .அதற்காக நன்றி .நான்  உமக்காக  என்ன செய்ய  வேண்டும்  எனக்கு கற்பியும் ஆமேன் .
என்று மட்டும் சொல் நான் உனக்கு சகலத்தையும் போதிப்பேன் .