உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

கிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா ?

 
அருட்தந்தை அவர்களே கிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா ?


பதில்
அன்பரே !
  • யோகா என்பதும், தியானம் என்பதும் உடல், மன கட்டுப்பாட்டிற்கான ஒரு பயிற்சியே. இதில் சமய சாயம் பூச அவசியமில்லை.
  • சில சமய ஆர்வலர்கள், இந்து முறைப்படி யோகா, தியானம் என்றும், கிறிஸ்தவ முறைப்படி யோகா, தியானம் என்றும் பயிற்சிகளை அளிக்கிறார்கள்.
  • இதை எந்த சமய கண்ணோட்டத்தோடும் பார்க்க வேண்டாம்.
  • சரீரத்தை கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, தியான பயிற்சிகளை நீங்கள் தாராளமாக செய்யலாம்.
  • இதில் பெரும்பாலும் இடறல் வராது.
  • நன்றி http://www.catholicpentecostmission.in/QuestionAnswer.html