உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

சகல பாவ சாபங்களை நீக்கி பரிசுத்தபடுத்தும் இயேசுவின் இரத்தம்

சகல பாவ சாபங்களை நீக்கி பரிசுத்தபடுத்தும் இயேசுவின்  இரத்தம்
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்![எபிரெயர்9:14]

நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.[எபிரெயர் 9:22

கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.[I கொரிந்தியர்16:24]