உன் கடவுளும் ஆண்டவருமான நான், நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9.
நான் உனக்கு வலிமை அளிப்பேன் - எசா 41:10.
உன்னை உருவாக்கிய நானே, உன்னைத் தாங்குவேன் - எசா 46:4.
நான் உன்னை கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்கமாட்டேன் - எரே 42:10.
இன்று முதல், நான் உனக்கு ஆசி வழங்குவேன் - ஆகா 2:19.
ஏழையானதால் அஞ்சாதே! நீ பெரும் செல்வனாவாய் - தோபி 4:21.
உன் கண்ணீரின் நாட்கள் முடிந்து போகும் - எசா 60:20.
ஆண்டவர், உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார் - தோபி 7:16.
ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம் - எசா 54:14.
துன்பத்திற்கு பதிலாக, இன்பத்தை அருள்வேன் - எரே 31:13.
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
இதோ! இஸ்ராயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை - திபா 121 :4.
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார் - திபா 121 :5
பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது - திபா 121 :6.
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார் - திபா 121 :7.