ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா உங்களின் பலவிதமான கேள்விகளுக்கு பதில்
இரவில் தனியாகப் பேய்ப் படம் பார்ப்பது, கையில் பிளேடால் வரைவது, கண்ணை மூடிக்கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிப்பது என்றவாறு அமைந்திருக்கும். இறுதியாக நீங்கள் வெற்றி பெறுவதற்கான கடைசி சவாலுக்காக காத்திருக்கும்போது, இறுதி சவால் உங்களை தற்கொலை செய்துகொள்ளச் சொல்லும்.நீங்கள் தற்கொலை செய்து கொள்ள முடியாது என மறுத்தால், ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்பதுதான் இதில் இருக்கும் பேராபத்து. 2015 ஆம் ஆண்டு முதல் தற்கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் இளையவர்களின் உயிரை தற்கொலை எனும் வடிவில் காவு கொண்டுள்ளது இந்த புளூவேல். இந்த பட்டியலில் எமது அயல் நாடான இந்தியாவும் இணைந்துள்ளமை எம்மை கவலையும் பீதியும் அடையச்செய்துள்ளது. விளையாட்டாக கூட விளையாடி பார்க்கக் கூடாத ஒரு விளையாட்டு ரஷ்யாவில் பிறந்து அயல் நாடான இந்தியா வரை பல உயிர்களை தற்கொலை எனும் போர்வையில் காவுகொண்டுள்ளது புளூவேல். பொதுவாக கணினி விளையாட்டுக்கள் சிறுவர்களை முழுமையாக தம் வசம் ஈர்த்து வசியப்படுத்தி விடுகின்றன. இதனால் சிறுவர்கள் கணினி விளையாட்டுக்கு அடிமைகளாகி கல்விச் செயற்பாட்டில் இருந்து திசை மாறுகின்றனர். அவ்வாறு இன்று உலகை அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ள மற்றுமொரு விளையாட்டு புளூவேல். நீலத் திமிங்கிலம் என தமிழில் அர்த்தப்படும் இந்த புளூவேல் கேம், இன்று உலகில் பரவலாக பேசப்படும், பலரது சாபத்திற்குள்ளானதுமான ஒரு விளையாட்டாக மாறியுள்ளது. இந்த சாபத்திற்கு காரணம் இதை விளையாடுபவர்களுக்கு போட்டி முடிவில் கிடைக்கும் பரிசுதான். பரிசு என்றதும் அது பணமோ பொருளோ அல்ல உயிர்…! பொதுவாக போட்டி ஒன்றில் வெற்றி பெறுபவருக்குதான் பரிசு கிடைக்கும். ஆனால் இது விதிவிலக்கானது. இந்த போட்டியில் போட்டியாளர் இறுதியில் தன் உயிரை போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு பரிசளிக்க வேண்டும். இதுதான் போட்டியின் விதி. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உளவியல் மாணவரான ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடகின் என்பவர் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்துள்ளார்.சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லாமல் இருப்பவர்களை தற்கொலை செய்யவைத்து அதன் மூலம் சமூகத்தை “சுத்தம்” செய்வதாக தன் தரப்பு நியாய வாதத்தை முன்வைத்து பிலிப் இந்த விளையாட்டை அறிமுகம் செய்துள்ளார்.இந்த விளையாட்டால் 2015 ஆம் ஆண்டு முதல் தற்கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் இளையவர்களின் உயிரை தற்கொலை எனும் வடிவில் காவு கொண்டுள்ளது இந்த புளூவேல். இந்த பட்டியலில் எமது அயல் நாடான இந்தியாவும் இணைந்துள்ளமை எம்மை கவலையும் பீதியும் அடையச்செய்துள்ளது. போட்டியிட்டால் நாம் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுகின்றதல்லவா? அது தான் புளூவேல் போட்டியில் உள்ள மாயை. 50 சவால்களை கொண்டுள்ள இப் போட்டியில் சில தம்மைத்தாமே துன்புறுத்திக்கொள்ளும் வகை சவால்களையும் உள்ளடக்கியது. இறுதி சவால் தற்கொலை. இவ்வாறு அபாயகரமான சவால்களை கொண்ட புளூவேல் என்பது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை நாமாக தேடிப் போய் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரை பறிக்க இதுவாகவே இணைய வழியில் வந்து உங்கள் வாசல் கதவை தட்டும். அதன் படி இந்த விளையாட்டில் உங்களை இணைத்துக்கொள்வதற்காக முதலில் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு ஓர் அழைப்பு வரும். அந்த மின்னஞ்சல் அழைப்பில் ‘புளூவேல் சேலஞ்சை எதிர்கொள்ளத் தயாரா?’ என உங்களை அழைக்கும். ‘ஆம்’ என்று நீங்கள் பதில் அனுப்பினால், விளையாட்டின் விதிமுறைகளை உங்களுக்கு அனுப்புவார்கள். முதலில் பார்ப்பதற்கு மிக எளிதான விதிமுறையாகவே தோன்றும். இவை எம்மை இந்த விளையாட்டுக்கு உள்ளீர்க்க விரிக்கப்படும் மாயவலை. அறியாமலேனும் இம் மாய வலையில் நீங்கள் சிக்கிவிட்டீர்களாயின் இந்த போட்டியில் உள்ள 50 சாவால்களை எதிர்கொண்டு நீங்கள் செய்து காட்ட வேண்டும். சவாலை நீங்கள் செய்து முடிப்பதை காணொளிகளாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்து அந்தக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இறுதியான சவாலை நீங்கள் எதிர் கொண்டு செய்துவிட்டால் நீங்கள் வெற்றியாளர். ஆனால் போட்டியின் இறுதி 50 ஆவது சவாலை செய்த பின்னர் போட்டியின் வெற்றியாளராக பெருமிதம் அடைய நீங்கள் இவ்வுலகில் இருக்க மாட்டீர்கள். காரணம் அதிபயங்கரமான அந்த இறுதி சவால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதுதான். இறுதி சவாலில் நீங்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. முதல் கட்ட சவால்கள் மிக எளிதாகவே இருக்கும். ஒரு நீலத் திமிங்கிலத்தை வரைய வேண்டும், தனியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு மயானத்திற்கு செல்ல வேண்டும், இனிப்புகளை அள்ளி வாய் நிறைய சாப்பிட வேண்டும். இவற்றில் ஒவ்வொன்றையும் நீங்கள் செய்து முடிக்க முடிக்க, உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மெல்ல படிநிலைகள் உயர உயர சவால்கள் கடினமாகிக்கொண்டே போகும். அடுத்து வரும் சவால்கள் எம்மை நாமே வதைத்துக்கொள்வது. இதன்படி இரவில் தனியாகப் பேய்ப் படம் பார்ப்பது, கையில் பிளேடால் வரைவது, கண்ணை மூடிக்கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிப்பது என்றவாறு அமைந்திருக்கும். இறுதியாக நீங்கள் வெற்றி பெறுவதற்கான கடைசி சவாலுக்காக காத்திருக்கும்போது, இறுதி சவால் உங்களை தற்கொலை செய்துகொள்ளச் சொல்லும். நீங்கள் தற்கொலை செய்து கொள்ள முடியாது என மறுத்தால், ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்பதுதான் இதில் இருக்கும் பேராபத்து. இப்போதுதான் நாம் அவர்களின் வலையில் முழுமையாக சிக்கிக்கொண்டுள்ளதை உணர்வோம். காரணம் ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்னஞ்சல் தொடர்பாடல்களின் ஊடாக உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணினியிலோ அல்லது கையடக்க தொலைபேசியிலோ ‘ட்ரோஜன் வைரஸ்’ எனப்படும் வைரஸ் அனுப்பப்பட்டு, உங்கள் இரகசிய தகவல்கள் அக்குழுவின் கையில் சிக்கி இருக்கும். இனி நீங்கள் சவாலை ஏற்கவில்லை என்றால், உங்கள் இரகசிய தகவல்கள் கசியவிடப்படும் என மிரட்டுவார்கள். பெரும்பாலான சிறுவர்கள், இளம் வயதினரை அந்தக் கும்பல் குறிவைக்கிறது. சிறுவர்கள் விபரீதம் தெரியாமல் பயந்துபோய் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ரஷ்யாவை மையமாகக்கொண்டு ஆரம்பித்த இந்த விளையாட்டு, இணையம் மூலம் உலகம் முழுவதுமாக சிறுவர்கள் உட்பட சுமார் 3000க்கும் அதிகமானவர்களை தற்கொலைக்குத் தூண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரஷ்ய அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை மேற்கொண்டது. உலகம் முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. விளையாட்டின் முக்கிய சூத்திரதாரியான இலியா சிட்ரோவ் எனும் 26 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார். இதனால் இந்த விளையாட்டு குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர். இருந்த போதிலும் மும்பையைச் சேர்ந்த சிறுவன் மன்பிரீத் சிங்கின் தற்கொலை, அவன் நண்பர்களின் வாக்குமூலம் போன்றவை மூலம் புளூவேல் விளையாட்டு தொடர்பான பீதி மீண்டும் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது. புளூவேல் என்றால் நீல நிறத் திமிங்கிலம் என்று அர்த்தம். அமெரிக்காவில் உள்ள ஒரு கடற்கரையில் திமிங்கிலங்கள் திடீரென தண்ணீரை விட்டு வெளியே தாமாக வந்து இறந்தன. அதைப் பார்க்க திமிங்கிலங்கள் தாமாகத் தற்கொலை செய்துகொண்டதைப் போலிருந்தது. இதை அடிப்படையாக வைத்துத் தான் இந்த விபரீத விளையாட்டுக்கு புளூவேல் சேலஞ்ச் எனப் பெயரிட்டுள்ளனர். தற்கொலையைத் தூண்டும் குழுக்கள், தங்கள் உறுப்பினர்களை தற்கொலைக்குத் தூண்டி, அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை நேரலையில் ஒளிபரப்பி ரசிப்பவர்கள் என இணையத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய குழுக்கள் அதிகமாக உள்ளன. ஒரு ஆய்வின்படி உலகம் முழுவதும் தற்கொலையைத் தூண்டும் இணையத்தளங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதும், அதனால் சுமார் 51 சதவீதம் சிறுவர்களின் மரணம் அதிகமாகி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துச் செல்ல செல்ல சிறுவர்கள் உட்பட எம்மவர்களுக்கு இணைய பாவனையானது இலகுவில் கிடைக்கும் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் செல்வம் படைத்தவர்களுக்கு மாத்திரம் என வரையறைக்குள் இருந்த இணையப்பாவனையானது இன்று கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கும் இலகுவில் கிடைக்கும் நிலைக்கு விருத்தியடைந்துள்ளது. இதுவரை காலமும் நாம் சிறுவர்களை இணைய பாவனையில் இருந்து கட்டுப்படுத்தி வைத்தது இணைய பாவனையால் தீய வழிக்கு சென்று விடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே. ஆனால் தற்போது சிறுவர்களின் உயிரை காப்பாற்ற அவர்களை இணையம் பாவிப்பதை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி எம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது. எனவே பெற்றோர் தம் பிள்ளைகள் இணையத்தை பயன்படுத்தும் போது அது குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இன்றைய சிறுவர்கள் தொழில்நுட்ப அறிவை மிதமாக கொண்டவர்களாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு இணைய பாவனை குறித்து நாம் புதிதாக ஒன்றும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பல இணைய விளையாட்டுக்கள் பிள்ளைகளின் பொழுதுப்போக்கிற்கு துணை புரிந்தாலும் உயிர் பறிக்கும் விளையாட்டுக்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்க வேண்டியது பெற்றோரின் முக்கிய கடமையாகும். அண்மையில் மதுரையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் புளூவேல் விளையாட்டிற்கு அடிமையாகி தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள நிலையில் இவ்விளையாட்டின் ஆதிக்கம் எமது நாட்டையும் நெருங்கி விட்டதை எமக்கு பறைசாற்றுகின்றது. எனவே நாம் இது குறித்து மேலும் அவதானமாக இருந்து எமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இணையத்தால் இன்று நமக்குப் பல நன்மைகள் இருந்தாலும் மெய் உலகைப் பிரதிபலிக்கும் மெய்நிகர் உலகான இணையத்துக்கும் கறுப்பு பக்கங்கள் உள்ளன. துடிப்பு,வேகம், கோபம், ஆர்வம், சோகம், தனிமை, மனக் குழப்பம், ஏக்கம் நிறைந்த இளம் ரத்தங்களை விபரீதங்களை நோக்கி இணையமும் அழைத்துச் சென்றுவிடுகிறது. பெற்றோரின் கவனமும். ஆசிரியர்களின் பொறுப்பும், நண்பர்களின் அக்கறையும்தான் இளைய சமுதாயத்தை காக்கும். இந்த கறுப்புத் தளங்களை ஒழிக்க எமது சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சிறுவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சலைப் போக்க தேவையான நடவடிக்கைகளை பெற்றோரும் ஆசிரியர்களும் இணைந்து முன்னெடுப்பதன் மூலம் சிறுவர்கள் இவ்வாறான விளையாட்டுக்களுக்கு இரையாகாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.